
ஜனாவிடம் நான் பல பாடங்களை கற்றுக்கொண்டேன் : ஆளுனர் செந்தில் தொண்டமான்
நான் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன எனினும் கோவிந்தன் கருணாகரன் எம்பியுடன் பணியாற்றிய வேளைகளில் அவரிடமிருந்து நான் பல பாடங்களை கற்றுக்கொண்டேன் என, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் மணிவிழாவில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கோவிந்தன் கருணாகரனின் 40 வருட போராட்ட அரசியல் வாழ்க்கையை நினைவு கூறும் முகமாக “ஜனாவின் வாக்கு மூலம்” நூலை வெளியிடும் முகமாக அவரது 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் உட்பட பல மூத்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் கோவிந்தன் கருணாகரனுக்கு செந்தில் தொண்டமானினால் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததோடு, புத்தகத்தின் முதல் பிரதியும் செந்தில் தொண்டமானுக்கு கோவிந்தன் கருணாகரனால் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிந்தன் கருணாகரனின் ஆதரவாளர்களால் நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.