ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நிறைவு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாமல் போன அஞ்சல் வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதற்கான மேலதிக நாட்களாக நேற்றும், நேற்று முன்தினமும் ஒதுக்கப்பட்டன.
அதன்படி இன்றுடன் அஞ்சல் வாக்களிப்புகள் நிறைவடைகின்ற நிலையில், இனி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டெம்பர் 21ஆம் திகதி உட்பட எந்த தினத்திலும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.