சேவைநலன் பாராட்டு விழாவும், புலமையாளர்கள் கௌரவிப்பும்

-கல்முனை நிருபர்-

கல்முனை கல்விவலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த வருடம் வெளியான புள்ளிகளின் அடிப்படையில் சித்தியெய்திய புலமையாளர்களையும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியைகளையும் கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம் அஸ்மி தலைமையில் இன்று பாடசாலை கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், கெளரவ அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதம கணக்காளர் வை. ஹபீபுள்ளாஹ்  மற்றும் விஷேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே. டேவிட் உட்பட முன்னாள் கல்முனை சாஹிறாக் கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் புலமைப்பரிசில் சித்தியெய்திய எம்.ஏ.சீனத் லிமா (158) மற்றும் எம்.எச்.எம். றுசைக் (153) ஆகிய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், இடம்மாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியைகளான திருமதி எல்.ஏ. அழீம் மற்றும் திருமதி மணிமாறன் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர்.