
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு வருகை தந்தபோது சேலை அணியாமல் வந்த ஆசிரியர்கள் சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பன்னிப்பிட்டியவில் உள்ள ஒரு பாடசாலையின் பரீட்சை விடைத்தாள் திருத்தும் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலைக்கு பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நேற்று வியாழக்கிழமை வருகை தந்திருந்த ஆசிரியைகள் சிலர் சேலை அணியாமல் வேறு உடையில் சமூகமளித்துள்ளனர் அதனால் அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு குறித்த பாடசாலையின் அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலையின் அதிபர் இவ்வாறு தங்களை வெளியேற்ற முடியாது என்றும் பாடசாலைக்கு அவர் அதிபராக இருந்தாலும் கூட குறித்த பரீட்சை விடைத்தாள் திருத்தும் மண்டபம் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அதற்கு பாடசாலைக்கு என்று ஒரு ஒழுக்கம் இருக்கிறது அதை ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அதிபர் பதிலளித்தார்.
அப்போது குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
எனினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத காரணத்தினால் குறித்த பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை பரீட்சை ஆணையாளருடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்