சுவிட்சர்லாந்தில் ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரியுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2023 டிசம்பர் மாதத்தை விட 23.4 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று புலம்பெயர்வுக்கான மாநில செயலகத்தால் (SEM) வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையின் படி மதிப்பாய்வுக்கு உட்பட்ட ஜனவரி மாதத்தில், உக்ரைனில் இருந்து விண்ணப்பித்த 90 அகதிகளுக்கு பாதுகாப்பு  புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து ஜனவரி மாதம் 1487 பேர் பாதுகாப்பு கருதி விண்ணப்பித்திருந்தனர்.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து 793 , துருக்கி 501 ,அல்ஜீரியா 224 மொராக்கோ 143 , மற்றும் எரித்திரியாவில் இருந்து 142 விண்ணப்பங்கள் ஆகியவை ஜனவரியில் புகலிடக் கோரிக்கையை சமர்ப்பித்த மக்களின் மைய நாடுகளாகும்.

ஜனவரி மாதத்தில் 2743 புகலிட விண்ணப்பங்களை பரிசீலிக்கப்பட்ட நிலையில் ,புகலிடம் வழங்குவதில்லை என மொத்தம் 732 தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் 666 பேருக்கு புகலிடம் வழங்கப்பட்டது.

555 பேருக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்ட நிலையில்  புகலிடக் கோரிக்கை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 15,655 ஆக உள்ளது.