சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் நேற்று திங்கட்கிழமை உப்புவெளி பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் சிரமதானப்பணி நடைபெற்றது.

கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் “சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்” எனும் தொனிப் பொருளில் கிராம மட்டத்திலான சிறுவர்கள், இளையோர்கள் மற்றும் கிராம மட்டத்திலான பெரியவர்கள், அருட்சகோதரிகள், மற்றும் சமூகபங்காளர்கள் இணைந்து இணைந்து இந்த சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது 200 க்கும் அதிகமானோர் பங்குபற்றியிருந்ததுடன் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.பி.போல் றொபின்சனின் தலைமையிலும் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மற்றும் நிறுவனத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்