சுகாதார துவாய்களுக்கு வரியை குறைக்க நடவடிக்கை

நாட்டில் சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இறக்குமதி செய்யப்படும் சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, செஸ் தீர்வை மற்றும் சுங்க வரியை குறைக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு மாதந்தம் 150 ரூபாவை மட்டுமே செலவிடக்கூடிய வகையிலான சுகாதார துவாய்களை வழங்குவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.