சீமெந்து கலந்த தலைமுடிச் சாயம் : அழகுக்கலை நிலையம் முற்றுகை

மட்டக்குளி பகுதியில் சீமெந்தைக் கலந்து போலியான முறையில் முடிச் சாயம் தயாரிக்கப்பட்ட இடம்மொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை முற்றுகையிட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சுமார் 28 மில்லியன் ரூபா பெறுமதியான போலி முடி சாயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் விசாரணையில் பிரபல தயாரிப்புகளின் காலாவதியான மற்றும் சேதமடைந்த ஹெயார் டையில் சிமெந்து பவுடரை கலந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க