சீன மருத்துவமனையில் தீவிபத்து: 21 பேர் பலி

சீனாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் பலி.

சீன தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள பெங்டாய் என்ற பகுதியில் நேற்று நண்பகல் 1 மணி அளவில் தனியார் மருத்துவமனையில் தீப்பிடித்துள்ளது.

சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அவர்கள் 71 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து மீட்டு வேறு இடத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கோர விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவிபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்