“சிவன் பாலியல் தொல்லை கொடுப்பதாக” – காளி மாதா பொலிஸில் புகார்

“நான் அவன் இல்லை சிவன்”  சிவன் கூப்பிடுறாரு வா..  என கூறிக் கொண்டு ஆண் சாமியார் பாலியல் தொல்லை கொடுப்பதாக காளி மாதா பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வரும் பவித்ரா. இவர் தன்னை காளிமாதாவின் அவதாரம் என கூறிக் கொண்டு ஆசிரமம் நடத்தி வருகிறார்.

முகம் முழுவதும் மேக்அப் , கழுத்தில் சிவலிங்க டாலர், கழுத்து நிறைய நகைகள், கோல்ட் நிறத்தில் தலைமுடி, உதட்டில் சாயம் என வலம் நிலையில்தான் இவருக்கு நான் அவன் இல்லை சிவன் என தெரிவித்து தவயோகி சிவஞானம் எனும் போலி சாமியார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

காளிமாதா எம்போதும் அம்பிரல்லா கட்டிங் சுடிதார்தான் கலர் கலராக அணிந்து கொண்டிருப்பார். தன்னிடம் வந்து ஆசி பெற்றதால்தான் ஓ பன்னீர் செல்வம் முதல்வரானதாகவும், தன்னை வரவேற்காததால்தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை இழந்ததாகவும் கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

இந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் நில மோசடி வழக்கில் தவயோகி திருஞானம் என்பவர் பவித்ரா மீது புகார் கொடுத்திருந்தார்.

இதையடுத்து தவயோகி சிவஞானம் எனும் போலி சாமியார் என்னை ஏமாற்றி பண மோசடி செய்த நிலையில் புலித்தோல், மான்தோல, மயில் தோகைகள், போதை பொருள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார்.

நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக மயிலின் இரத்தத்தை குடித்து வருகிறார். மேலும் என்னிடம் அவர் சிவன் என கூறிக் கொண்டு எனக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் தவயோகியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி டிஜிபி அலுவலகத்தில் அமர்ந்து பவித்ரா போராட்டம் நடத்தியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.