சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்றார் வில் ஸ்மித்

கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வில் ஸ்மித் வென்றார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94ஆவது ஒஸ்கார் விருது வங்கும் விழா நடைபெற்று வருகிறது.

அதில் அமெரிக்கத் திரைப்படமான டியூன் திரைப்படத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

மேலும் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித்தும், சிறந்த துணை நடிகருக்கான விருதை டிராய் கோட்சூரும் வென்றனர்.

கிங் ரிச்சர்ட் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடிகைக்கான விருதை ஜெஸ்ஸிகா கேஸ்டைன் தட்டிச் சென்றார்.

தி ஐஸ் ஆஃப் டாமி ஃபேய் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஜெஸிகா கேஸ்டைனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.