சனத் ஜயசூரியவை இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு
கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துள்ளார். இலங்கை நாட்டுக்காகவும் கிரிக்கெட்டுக்காகவும் அவர் மேற்கொண்ட பல்வேறு சாதனைகள் தொடர்பில் உயர் ஸ்தானிகர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா வழங்கி வரும் ஆதரவு தொடர்பில் சனத் ஜயசூரிய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது சனத் ஜயசூரிய தனது கையொப்பத்துடனான கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டையொன்றை, நினைவுப் பரிசாக இந்திய உயர் ஸதானிகர் கோபால் பாக்லேவிற்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.