சட்டக்கல்லூரிக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு
சட்டக்கல்லூரிக்கான நுழைவுக் கட்டணம் உட்பட பொது நுழைவுத் பரீட்சை கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு மூலம் பொது நுழைவுத் பரீட்சையின் மூலம் நேரடியாக சேர்க்கப்படும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நுழைவுக் கட்டணம் உட்பட ஆண்டுக்கு 67,500 ரூபாய் அறவிடப்படும் .
வெளிநாட்டு சட்டமாணி பட்டம் பெற்று முதலாம் ஆண்டில் நுழையும் மாணவர்கள் அந்த ஆண்டுக்கான நுழைவுக் கட்டணமாக 75,000 ரூபாவுடன் 117,500 ரூபா செலுத்த வேண்டும எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வருட மாணவர்களுக்கு 40,500 ரூபாவும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு 50,500 ரூபாவும் மொத்தக் கட்டணமாக அறவிடுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.