கோயில் கதவை உடைத்து பணம், நகை திருட்டு
-பதுளை நிருபர்-
ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது
இன்று திங்கட்கிழமை அதிகாலை பூஜை செய்வதற்காக ஆலயத்துக்கு வந்த பூசகர், ஆலய கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து ஊர் மக்களிடம் கூறியதை தொடர்ந்து, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, ஆலயத்தில் உள்ள இரண்டு உண்டிகளிலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது
மேலும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகையும் களவாடப்பட்டு உள்ளதாகவும், ஊர்மக்கள் தெரிவித்ததோடு விசாரணைகளை அப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்