கோடைக்காலத்தில் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?

சருமத்துக்கு ஏற்ற மேக்கப், அந்தந்த விசேஷங்களுக்கு ஏற்ற மேக்கப், ஆடைக்கு ஏற்ற மேக்கப், நீண்ட நேரம் கலையாமல் வாட்டர் ப்ரூப் மேக்கப், ஸ்வெட்ப்ரூப் மேக்கப் என்று பல வகையான மேக்கப் உள்ளன.

ஆனால், எதுவாக இருந்தாலும், கொளுத்தும் கோடை வெளியிலில், வியர்வையை புழுக்கத்தை மீறி மேக்கப் கலையாமல் இருக்க சரியான காஸ்மெட்டிக் பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். வியர்வை ஒரு பக்கம் இருக்க, அல்ட்ரா வயலட் கதிர்களின் பாதிப்பும் மேக்கப்பை கலைக்கும். மேலும், சருமத்தையும் பாதிக்கும்.

அதிக வெப்பத்துடன், வியர்வையும் தூசும் சேர்ந்து சருமத்தில் முகப்பரு, நிறம் மங்குதல் என்று தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

நல்ல மேக்கப்பும் இருக்க வேண்டும், சருமமும் பாதிப்படைய கூடாது என்று நினைப்பவர்களுக்கான டிப்ஸ் இங்கே.

லைட் வெயிட் ஃபார்முலாவை பயன்படுத்துங்கள்: மேக்கப் ஹெவியாக பல லேயர்களில் போட்டிருந்தாலும் கூட, காஸ்மெட்டிக்ஸ் மிகவும் லைட்வெயிட்டாக, போட்டிருப்பதே தெரியாமல் இருக்கும் அளவுக்கு கிடைக்கிறது. கோடையில் மேக்கப் லைட்டாக, லிக்விட் ஃபார்முலேஷன் கொண்ட பொருட்களை வைத்து போட்டுக்கொண்டால் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும். சன்ஸ்கிரீன், ஃபுவுண்டேஷன், மாய்ஸ்ச்சரைசர், ப்ரைமர் என்று நீங்கள் கிரீம் அல்லது ஜெல் ஃபார்முலாவை பயன்படுத்தி வந்திருந்தால், அதை லிக்விட் ஃபார்முலேஷனுக்கு மாற்றுங்கள். மாயிஸ்ச்சரைசருக்கு பதிலாக, BB கிரீம் அல்லது CC கிரீம் அப்ளை செய்தால், சருமத்துக்கும் ஊட்டமளிக்கும், நல்ல கவரேஜ் அளிக்கும்.

வாட்டர்ப்ரூப் ஃபார்முலா : மேலே கூறியுள்ளது போல, அதிகப்படியான வெப்பமும், வியர்வையும் மேக்கப்பை பாதிக்கும். எனவே, நீங்கள் அதிகமாக வெளியிடங்களில் இருக்கும் போது, வாட்டர்ப்ரூப் ஃபார்முலா கொண்ட மேக்கப் ஐட்டங்களை பயன்படுத்துங்கள்.

SPF ஃபார்முலேஷன் இருக்கும் காஸ்மெட்டிக்ஸ் : சம்மரில் மேக்கப் போடும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். பல லேயர் மேக்கப் போடவே கூடாது. எனவே, பல அம்சங்கள் கொண்ட ஒரே காஸ்மெட்டிக்கை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ஃபவுண்டேஷன், சன்ஸ்க்ரீன் SPF, மாயிஸ்ச்சரைசர் அனைத்தும் ஒரே காஸ்மெட்டிக்கில் உள்ள பொருளை பயன்படுத்தலாம். அதே போல, குறைந்தது SPF 30 ஃபார்முலேஷன் உள்ள காஸ்மெட்டிக்ஸ் கொண்ட பொருட்களை பயன்படுத்துங்கள்.

ஃபினிஷ்ங் டச் மிகவும் முக்கியம் : வெயிலில் மேக்கப் வறண்டு போகாமல் இருக்கவும், பளபளப்பாக மேட் பினிஷுடன் இருக்கவும் நீங்கள் DEWY ஃபார்முலா கொண்ட பொருட்களை பயன்படுத்தவும். இது இயற்கையான ஃபினிஷிங்கையும், சருமத்தை ‘டல்’ ஆக்காமல் பளிச்சென்றும், பளபளப்பாகவும் காண்பிக்கும்.

மேற்பூச்சாக பவுடர் அப்ளை செய்து லாக் செய்யவும் : மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க வேண்டுமென்றால், செட்டிங் ஸ்ப்ரே அடிக்க வேண்டும் அல்லது லூஸ் பவுடரை அப்ளை செய்து லாக் செய்ய வேண்டும். இது கலையாமல், வழியாமல் நீண்ட நேரம் ஃபிரெஷ்ஷாக போலவே இருக்கும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்