கொள்ளை கும்பலை வழிநடத்திய கணவன் மற்றும் மனைவி கைது

கொட்டதெனிய பிரதேசத்தில் கொள்ளைக் கும்பலொன்றை வழிநடத்தியதாகக் கூறப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதியினர் சில காலமாக பல்வேறு நபர்களை பயன்படுத்தி வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களில் இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன் படி குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 53 வயதான சந்தேகநபர்களை கொடதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து ஒரு தங்கச் சங்கிலிஇ 4 தங்க மோதிரங்கள்இ உணவுப்பொருட்கள், எரிவாயு கொள்கலன், என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்