கைவிசேடம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்

கைவிசேடம் கொடுக்க மறுத்தவர்  இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவகையில்,

வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு கைவிசேடம் வழங்கியுள்ளார்.

இதை கேள்வியுற்ற குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் மதுபோதையில் அங்கு சென்று தனக்கும் கைவிசேடம் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு கைவிசேடம் வழங்கியவர் நாளை காலை வாருங்கள் கைவிசேடம் தருகிறேன், என கூறியுள்ளார்.

இதனையடுத்து, மதுபோதையில் இருந்தவர் கைவிசேடம் வழங்கிய நபர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

தாக்குதலால் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.