குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பெண் தொழிலாளர்கள்

கிரேக்லி தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 7 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது தேயிலை மலைக்கு அடியிலிருந்த குளவிக்கூடு கலைந்துள்ளதாக தெரியவருகிறது.