குறுகிய காலத்தில் 5 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் விற்பனை

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த 19 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் தற்போது ஆயிரம் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிய வருகிறது.

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் 18 ஆயிரம் கிலோகிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவிக்கு வந்து குறுகிய காலத்தில் 5 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்தார்.

தங்கத்தை விற்பனை செய்த போது ஒரு அவுன்ஸ் தங்கத்தை ஆயிரத்து 600 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தினத்திற்கு அண்மைய தினத்தில் உலக சந்தை யில் ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 700 டொலர் என்ற வீதத்தில் அதிகரித்து காணப்பட்டது எனவும் விஜேவர்தன கூறினார்.