குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து ஆராய விசேட குழு நியமனம்

குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது குறித்து ஆராய விசேட குழு நியமனம்

இலங்கையிலிருந்து குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக குழுவொன்று 4 அமைச்சுக்களின் அதிகாரிகளை உள்ளடக்கி நியமிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு இலங்கையில் உள்ள குரங்குகளை வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இது சமூகங்க வலையதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வனவிலங்கு, பெருந்தோட்டங்கள், நீதி, மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்களாக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயன்முறை எப்படி மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இதுவரை சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதன்படி, இலங்கையின் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்