குமார் வெல்கமவின் உடல் நிலை குறித்து அறிவிப்பு
நாட்டில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைதியின்மையின் போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் குழுவினால் தாக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என அவரது சகோதரர் நளின் வெல்கம தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் பாதுகாப்புக் காரணங்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருப்பதாகவும் மற்றபடி நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் “எந்தவொரு எலும்பு முறிவுகளும் இல்லை. வெறும் வெட்டுக் காயங்கள் மட்டுமே உள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று அவர் தனது ட்விட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.