குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே இன்று புதன்கிழமை சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி ஏனையோருக்கு இன்று சேவை வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள், தங்களது விண்ணப்பங்களை மதியம் 12 மணிக்கு முன்னதாக  தமது திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்