
கிவி பழத்தின் மருத்துவ குணங்கள்
🟢🟤இயற்கையாக விளைகின்ற ஒவ்வொரு பழங்களும் மனிதன் உண்ணக்கூடியதாகவே இருக்கின்றன. அவற்றில் ஒரு சில பழங்கள் மக்களிடம் பிரபலமானவை. அந்த வகையில் நாம் இந்த பதிவில் பிரபலமான கிவி பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். சீனாவில் வளர்கின்ற பெர்ரி வகை பழங்கள் தான் கிவி பழமாகும். இதற்கு சீனத்தின் நெல்லிக்காய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் ஏராளமான புரதச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் இதில் 9 வகையான சத்துக்கள் உள்ளன. அப்படி ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
🥝கிவி பழத்தில் வைட்டமின் ஈ சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண கிவி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
🥝நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். இந்த பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும் உடலில் சர்க்கரை அளவை சமமான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.
🥝கிவி பழத்தில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவிப் பழங்களை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
🥝பருமனாக உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு இந்த பழத்தை சாப்பிடலாம். ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், பேரிக்காய் மற்றும் ஆப்பிளில் 32.8 கலோரிகளும் வாழைப்பழத்தில் 22.4 கலோரிகளும் மற்ற பழங்களில் 3.8 கலோரிகளும் உள்ளது. ஆனால் இந்த பழத்தில் மிக குறைவான அளவு கலோரி உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பழமாகும்.
🥝கிவி பழம் கொழுப்பின் அளவைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இரத்தம் உறைவதை தடுக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே இந்த பழம் இரத்த கொழுப்புகளால் ஏற்படும் தீங்கை தடுக்கிறது.
🥝இந்த பழத்தில் உள்ள தோலில் அதிக அளவு விட்டமின்ஸ், கனிமச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் இதய நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. மேலும் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இதயத்துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
🥝கிவி பழம் டி. என். ஏ குறைப்பாட்டை சரி செய்கிறது. கிவி சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான புற்றுநோய் சிகிச்சை முறைக்கு கிவி ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
🥝கிவிப் பழம் வைட்டமின் சி யின் சிறந்த மூலமாகும். இது இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும். கிவிப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
🥝கிவி ப்ரூட்டில் அதிக அளவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டான வைட்டமின் சி உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது இளமையோடு வைத்திப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் அல்லது தாமதப்படுத்தவும் உதவுகிறது.
🥝ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கிவி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் எ மற்றும் ஈ சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் பலாப்பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.
கிவி பழத்தின் மருத்துவ குணங்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்