கிழக்கில் படைப்புளு தாக்கம் அதிகரிப்பு
படைப்புளுவின் தாக்கம் காரணமாக பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சோளம் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேசத்தில் கற்குழி,வட்டமடு,பனிச்சங்குளம்,குரங்குபாஞ்சான் உட்பட பல பகுதிகளிலும் தற்போது சோளக் கதிர் அறுவடை இடம் பெற்று வருகிறது இந்த நிலையில் ஒரு வகை படைப் புளு இனம் தாக்கம் அதிகரிப்பால் விளைச்சல் குறைவு எனவும் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
பல இலட்சம் ரூபா செலவு செய்து சோள செய்கை மேற்கொண்டிருந்த போதும் உரிய விளைச்சல் கிடைக்கவில்லை இதற்கு காரணம் பசளை தட்டுப்பாடு ,படை புளுவின் தாக்கம் போன்றன ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.