கிளி பற்றிய 10 வரிகள்

கிளி பற்றிய 10 வரிகள்

கிளி பற்றிய 10 வரிகள்

🟢🔴பச்சைக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி என்பது பிசிட்டாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பிசிட்டாகுலா பேரினத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான கிளி ஆகும். இது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தை பூர்வீகமாக கொண்டது. மேலும் இப்போது இது உலகின் பல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, செல்லப்பிராணி வர்த்தகத்திற்காக வளர்க்கப்படுகிறன. அங்கு காட்டுப் பறவையாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன.

🟢🔴பச்சை கிளிகளை பெரும்பாலான மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வீட்டில் செல்ல பிராணியாக வளர்த்து வருகின்றன. அந்தவகையில் கிளி பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

  1.  கிளி மிகவும் அழகான பறவை வகைகளில் ஒன்றாகும்.
  2. கிளி நாம் பேசுவதை திருப்பி பேசும் பறவை ஆகும்.
  3. கிளிக்கு வளைந்த அழகான அலகு உண்டு.
  4. இந்த உலகில் 372 கிளி வகைகள் உள்ளன.
  5. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும்.
  6. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன.
  7.  கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டும் இடும்.
  8.  பெரும்பாலான கிளி வகைகள் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன.
  9. ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.
  10. கிளிகள் மட்டுமே தங்கள் கால்களால் உண்ணும் திறன் கொண்ட பறவைகள். ஏனெனில் கிளிகளுக்கு ஜிகோடாக்டைல் ​​பாதங்கள் உள்ளன, அதாவது ஒவ்வொரு காலிலும் நான்கு கால்விரல்கள் உள்ளன, இரண்டு முன்னோக்கியும் இரண்டு பின்நோக்கியும் உள்ளன.

கிளி பற்றிய 10 வரிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்