கிட்னி நன்றாக செயல்பட உணவு

கிட்னி நன்றாக செயல்பட உணவு

கிட்னி நன்றாக செயல்பட உணவு

🟣🟠சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருள்களை வடிகட்டி உடலில் இருந்து சிறுநீராக வெளியேற்றுகிறது. இது திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் அளவை சமநிலைப்படுத்துகிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நிலைமைகள் அவை செயல்படும் திறனை பாதிக்கலாம். இந்த சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன உணவுகள் எடுக்க வேண்டும் எக்பதைப் பார்ப்போம்.

💦புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

💦நம் அன்றாட வாழ்வில் தினமும் ஏதாவது ஒரு கீரையை நாம் தவறாமல் உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். கீரைகளில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் போன்றவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.

💦எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு குறையும். மேலும் எலுமிச்சை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட பெரிதும் உதவும்.

💦மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும்  மகிமையுடையது

💦பூண்டில் மாங்கனீசு, வைட்டமின் C மற்றும்வைட்டமின் B6 போன்ற பண்புகள் அதிகம் இருப்பதால் இது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

💦தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது அதிக அளவில் சிறுநீரை உற்பத்தி செய்து, உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.

💦இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு நல்லது. மேலும் இது இரத்தம் மற்றம் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது.

💦ஆப்பிளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

💦சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் உணவுகளில் கொத்தமல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் மாங்கனீசு, இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் C, வைட்டமின் K மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அதனால் இது சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, கற்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.

💦முட்டைகோஸ்ஸில் வைட்டமின் சத்துக்கள், ஃபோலிக் அமிலம் மற்றும் டையட்டரி நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. முட்டைகோஸை வாரத்திற்கு 2 முறையாவது சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

💦முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, தினசரி முட்டை உட்கொள்ள வேண்டும்.

💦பூசணி விதைகளில் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு குறையும்.

💦சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை உடலில் சோடியத்தின் அளவை சமப்படுத்தவும் சிறுநீரகங்களில் அதன் விளைவைக் குறைக்கவும் உதவும்.

💦பெர்ரிப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதோடு, நோய்களை எதிர்த்துப் போரராடும் பொருட்கள் பல நிறைந்துள்ளன. மேலும் இது சிறுநீரகங்களில் இருந்து யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

கிட்னி நன்றாக செயல்பட உணவு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்