கலாபூஷண விருது பெற்றார் பொன்மனச் செம்மல் எம்.எஸ்.தாஜ்மஹான்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 37ஆவது கலாபூஷண அரச விருது வழங்கும் விழா கொழும்பு – 07, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கலைஞரும் பொன்தமிழ் கவிஞருமான இலங்கைப் பொன்மனச் செம்மல் எம்.எஸ். தாஜ்மஹான் கலாபூஷணம் விருது வழங்கி, பாராட்டி கெளரவிப்பட்டார்.

நேத்ரா தொலைக்காட்சியின் தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்பட கலாசார அலுவல்கள் திணைக்கள குழுவினரிடமிருந்து கலாபூஷண விருதைப் பெற்றுக் கொண்டார்.