கமலா ஹரிஸுக்கு ஆதரவாக இணைந்த அமெரிக்க பிரபலங்கள்
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸுக்கு மார்வெல்ஸின் அவஞ்சர்ஸ் பட நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கமலா ஹரிஸுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மார்வெல்ஸின் அவஞ்சர்ஸ் பட நடிகர்கள் ரொபர்ட் டொனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹான்சன், கிறிஸ் யுவன்ஸ், மார்க் ரஃப்ல்லோ உள்ளிட்டோர் கமலா ஹரிஸுக்கு ஆதரவு தெரிவித்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்