கனவு பலன்கள் மாடு

கனவு பலன்கள் மாடு

கனவு பலன்கள் மாடு

🐮🐮🐮பசு மாட்டினை கனவில் கண்டால் என்ன பலன் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்து மதத்தில் பசு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உங்களுடைய கனவில் பசு வருவது லக்ஷ்மி தேவியே வருவதற்கு சமமாகும். அந்த வகையில் பசுவினை கனவில் கண்டால் என்னென்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

  1. கனவில் பசுவினை பார்ப்பது போன்று கனவு கண்டால் கனவு காண்பவருக்கு நீண்ட ஆயுள் பலம் உண்டு என்பதன் பொருளாக இந்த கனவு உணர்த்துகிறது.
  2. கனவில் பசுவானது மஞ்சள் நிறத்தில் இருந்தால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும்  நல்ல அதிர்ஷ்டத்தையும், விலை மதிக்க முடியாத பொருளை அடைய இருப்பதையும், நல்ல பக்தியுடன் இருக்க போவதையும் இந்த கனவின் மூலம் வெளிப்படுத்துகிறது.
  3. சிகப்பு நிறம் கொண்ட பசுவை கனவில் கண்டால் பெரிய ஆபத்து வரப்போவதை சுட்டி காட்டுகிறது. சிகப்பு நிறம் கொண்ட பசுவை கனவில் காண்பவர் வீட்டில் மின்சாதன பொருள் ஏதேனும் பழுது அடைந்திருந்தால் அதனை சரி செய்ய வேண்டும் என்பதை இந்த கனவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
  4. கருப்பு நிற பசுவை கனவில் பார்ப்பது போன்று கண்டால் கெட்ட கனவாக வர போகும் தொந்தரவுகளை குறிக்கிறது. கனவு காண்பவரும், அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு துன்பம் வரப்போவதை இந்த கனவு மூலம் அறியலாம்.
  5. பசுவிற்கு உணவளிப்பது போன்று கனவில் கண்டால் எதிர்பாராத ஆதாயங்கள் வரப்போவதை இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.
  6. இறந்த பசுவை கனவில் கண்டால் பண பற்றாக்குறை வரப்போவதை  உணர்த்துகிறது.
  7. பசு முட்டுவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு அவர்களின் நலன் பிடிக்காதவர்களால் வரவிருக்கும் துன்பத்தை அறிவதன் மூலமாக இந்த கனவு உணர்த்துகிறது.
  8.  கனவில் பசு விரட்டுவது போல் வந்தால் கெட்ட சகுனமாக எந்த ஒரு செயல் தொடங்கினாலும் தோல்வியில் முடிவதற்கு அறிகுறியாக இந்த கனவானது உணர்த்துகிறது.
  9. கனவில் பசுவுடன் காளை மாடு சேர்ந்து இருப்பது போல் கனவு வந்தால் இது நல்ல  கனவாக குடும்பம் பெருக போவதையும் அல்லது குழந்தை பிறக்க போவதையும், குடும்பம் முன்னேற்றம் அடைய போவதையும் இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.
  10. கனவில் பசு இறந்தது போல் வந்தால் கனவு காண்பவருக்கு ஏற்பட போகும் மன குழப்பத்தினையும், பெற்றோரிடமோ அல்லது குழந்தைகளிடமோ ஏற்பட போகும் உறவு முறிவையும் இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.
  11. கனவில் பசு கன்று குட்டியை ஈன்றது போல் வந்தால் கனவு காண்பவரின் உறவினருக்கோ, அல்லது நண்பர்களுக்கோ அவர்கள் குடும்பத்தில் பெண்கள் கருத்தரிப்பதை உணர்த்துகிறது.
  12.  கனவில் கூட்டமாக பசு இருப்பது போல் கனவு வந்தால் இது கனவு காண்பவர் தனியே இருக்கும் உணர்வில் இருப்பதை இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.

கனவு பலன்கள் மாடு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க