கத்தியை காட்டி மிரட்டி தங்க நகையை பறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை

-பதுளை நிருபர்-

மஹியங்கனை, மகாவலி ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் 210000 ரூபா பெறுமதியான தங்க நகையை திருடிச் சென்ற நபரை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 18ஆம் திகதி மாபகதேவாவ சேனானிகம பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவர் நகரில் உள்ள சாரதி பயிற்சி பாடசாலைக்கு சென்றுவிட்டு சில தேவைகளுக்காக மகாவலி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இந்த நபரை பயமுறுத்தி அவரது கழுத்தில் இருந்த சுமார் ஒன்றரை பவுன் சங்கிலியை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்