கண்களின் ஆரோக்கியம்

கண்களின் ஆரோக்கியம்

👁️இன்றைய நவீன காலத்தில் இளம் வயதில் பலரும் கண்ணாடி அணிவதுண்டு. கண்களில் பிரச்சனை வருவதும், பார்வை கோளாறுகள் வருவதும் வயதான காலத்தில் வரக்கூடிய பிரச்சனை.

👁️ஆனால் இளம் தலைமுறையினர் இது போன்ற கண்களில் கோளாறுகளுடன் இருக்கக்கூடிய காலகட்டமாக இது இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு தேவையான குறிப்பிட்ட சத்துப் பொருட்கள் கிடைக்காதது ஆகும்.

👁️நம்முடைய சித்தர்கள் கண்களுக்கு என்று பல பயிற்சிகளை மேற்கொண்டார்கள். தினமும் காலையில் கண் கருவிழிகளை சுழற்றுவது, இடது பக்கம், வலது பக்கம், மேல், மற்றும் கீழாக பார்வையை தொடர்ந்து மாற்றி கண்களுக்கும் பயிற்சி கொடுத்து வந்தார்கள்.

👁️இது போன்ற பயிற்சிகள் நிச்சயம் பலன் தரக்கூடியது. அத்துடன் சேர்த்து சூரிய நமஸ்காரம் செய்யும் போது கண்கள் நல்ல ஆரோக்கியம் பெறுகின்றன. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதற்கான அர்த்தம், கண்களில் கோளாறுகள் ஏற்பட்ட பிறகு கண்டிப்பாக ஒருவர் சூரிய நமஸ்காரம் செய்யும் போது அதிகாலையில் வரும் சூரிய ஒளியின் நன்மையால் நம் கண்களின் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமில்லாமல் விட்டமின் டி சத்தும் நமக்கு கிடைக்கும்.

👁️ஆனால் இது போன்ற பயிற்சிகள் மட்டும் நம்முடைய கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி விடாது. நமக்கு தேவையான சத்துக்களை உணவு பொருளின் மூலம் நாம் பெற வேண்டும். கண்கோளங்கள் கூட வலுவுடன் இருப்பதற்கு இயற்கையாக இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் சாதாரண கடல் உப்பு. சாதாரண கடல் உப்பில் நமக்கு தேவையான சத்துப் பொருட்கள் அனைத்தும் அடங்கி இருக்கின்றன.

👁️நாம் நினைக்கலாம் வெறும் சோடியம் குளோரைடு மட்டுமே கடல் உப்பில் இருக்கிறது என்று ஆனால் கடல் உப்பில் அதையும் தாண்டி பல்வேறு தாதுக்களும் அடங்கியுள்ளன. அதனால் கடல் கல் உப்பு தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது கண்ணின் கோளங்களை வலுப்படுத்துவதற்கு மிகவும் உதவக் கூடியதாக இருக்கும்.

கண் ஆரோக்கியத்திற்கு உணவு பொருட்கள்
🥗முள்ளங்கி, கேரட், தக்காளி போன்றவற்றில் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் ஏ அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்த மிகவும் உதவக் கூடியது.

🥗கண்கள் குளிர்ச்சி அடைய கண் கருவிழிகள் நன்றாக ஆரோக்கியமாக இருக்க வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

🥗பழங்களில் அண்ணாச்சி பழம், ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் கிவி என அனைத்திலும் வைட்டமின் சி அடங்கியுள்ளதால் இந்த பழங்களை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

🥗விட்டமின் ஏ அடங்கியுள்ள பப்பாளி பழத்தை கண்பார்வை மேம்படுத்துவதற்காக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைப்பழத்தில் விட்டமின் ஏ அடங்கியுள்ளதால் கண் பார்வைக்கும் கண் கருவிழிகளுக்கும் மிகவும் நல்லது.

🥗பாதாம், வால்நட், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகள் ஆகியவற்றில் சிங்க் மற்றும் விட்டமின் ஈ இருப்பதால் கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் கண்ணில் உள்ள ரெட்டினாவை இது போன்ற உணவுகள் வலுவடைய செய்கின்றன.

🥗மீன்கள் கண்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, கண்பார்வை சிறப்பாக இருப்பதற்கும், கண் கருவிழிகள் வலுவுடன் இருப்பதற்கும் கடல் மீன்கள் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

🥗துளசி நிலவேம்பு, மஞ்சள், கரிசலாங்கண்ணி, சீரகம், வெந்தயம், பீர்க்கங்காய், நெல்லிக்காய் மற்றும் அருகம்புல் போன்றவை கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய மிகச்சிறந்த மூலிகை உணவுப் பொருட்களாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்