கட்டாரில் 20 இலங்கையர் விடுதலை

கட்டாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

புனித ரமழானை முன்னிட்டு சிறைவாசம் அனுபவித்த 20 இலங்கையர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அபராத தொகை செலுத்தலிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.