
கடற்கரையில் கரையொதுங்கிய விசித்திர மீன்
கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் நெஹலேம் தெற்கில் இருந்து பாண்டன் வரை பல லான்செட் மீன்கள் ஓரிகானின் கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன.
இந்த மீன்கள் பொதுவாக கடலில் ஒரு மைல் ஆழத்திற்கு மேல் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆழ்கடல் மீன்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நீரில் வாழ்கின்றன மற்றும் உணவுக்காக பெரிங் கடல் வரை வடக்கே இடம்பெயரும்.
அவைகள் ஏன் கரை ஒதுங்குகின்றன. என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை என முகப்புத்தக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லான்செட் மீன்கள் ஒரு காலத்தில் டைனோசர்களுடன் நீந்தியது போல் இருக்கும். ஒரேகான் ஸ்டேட் பார்க்ஸ் முகப்புத்தகத்தில் மீன் மற்றும் அதன் புகைப்படங்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்