கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து, குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் ஒரு கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது கஞ்சாவினை விற்பனை செய்த 28 வயதுடைய பெண்ணொருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து 157 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்