Sri Lanka Tamil News Site

ஒரு இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம்

- Advertisement -

இந்த வருடம் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இலங்கை மத்திய வங்கியின் 2021 வருடாந்த அறிக்கையின் படி கடந்த வருடம் வேலைக்காக வெளிநாடுச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 795ஆக பதிவாகியுள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -