ஐஸ் போதைப் பொருள் கடத்தல்: எட்டு பேர் கைது

நாட்டிற்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய இந்தியர் ஒருவர் உள்ளிட்ட எட்டுப்பேர் கல்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்பிட்டியிலிருந்து அக்கறைப்பற்று பகுதிக்கு ஐஸ் போதை பொருளை கடத்தியதாக இந்தியாவிலிருந்து புடவைகளை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் இந்தியர்கள் உள்ளிட்ட எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்