
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவாட்டுக்கல் 02 பகுதியைச்சேர்ந்த 18 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்