மீன் வலையில் சிக்கிய ஐந்தடி நீளமுடைய முதலை

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்துக்குள் புகுந்து பரபப்பை ஏற்படுத்திய ஐந்தடி நீளமுடைய முதலை ஒன்று, நேற்று சனிக்கிழமை மாலை மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

சீனக்குடா, கொட்பே பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் இம்முதலை சிக்கியது.

உடனடியாக சீனக்குடா பொலிஸாருக்கும், பிராந்திய வன ஜீவராசி பகுதியினருக்கும் தகவல் வங்கப்பட்டு, வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகளால் மடிக்கிப் பிடிக்கப்பட்டமுதலையை, திருகோணமலை வனப் பகுதியில் அதிகாரிகள் விடுவித்தனர்.