எரிபொருள் தாங்கிவூர்திக்கு தீ வைக்க முயன்ற இளைஞர் கைது

ரம்புக்கனை சம்பவத்தில் எரிபொருள் தாங்கிவூர்திக்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் இன்று பிற்பகல் கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேக நபரை 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

எனினும். குறித்த இளைஞனுக்கு பிணை வாங்க எவரும் முன்வராத காரணத்தினால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.