எரிபொருள், எரிவாயு விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்-

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பணிப்பாளர் (யாழ்.போதனா வைத்தியசாலை), உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் (யாழ்ப்பாணம்), பிரதி ஆணையாளர் (கமநல அபிவிருத்தி திணைக்களம்), உதவிப் பணிப்பாளர் ( கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம்), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், தொகைச்சாலை அதிகாரி ( இ.பெ.ச), பிராந்திய முகாமையாளர்( இ.போ.ச), தலைவர்( வணிகர் கழகம்), பிரதம பிராந்திய முகாமையாளர் ( இ.போ.ச), சாலை முகாமையாளர்கள் ( இ.போ.ச) முகாமையாளர் ( எஸ்.வி.எம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.