ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றம் ஒத்திவைப்பு

-கிளிநொச்சி நிருபர்-

ஊர்காவற்றறை சுகாதார வைத்திய அதிகாரியை தெல்லிப்பழைக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்தி அதிகாரியை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பணி இடமாற்றம் அண்மையில் வழங்கப்பட்டது.

ஊர்காவற்துறைக்கு நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரி ஒருவரை நியமனம் செய்யாமல் வடமாகாண சுகாதார பணிப்பாளர் குறித்த இடமாற்றத்தை சிபாரிசு செய்திருந்தார்.

இந் நிலையில் குறித்த விடயம் வடமாகாண ஆளுநர் கவனத்திற்கு சென்றததன் காரணமாக இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது