ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை வைத்தியர் வாணி பிறேம்ஜித் யுஎஸ்ஏ( USA ) என்பவரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன்இ தொண்டு நிறுவனமாகிய வன்னி ஹோப் நிறுவனத்தினால் அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், தற்போதைய நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டும் அவரது தனிப்பட்ட நிதியில் இத்தகைய மருந்துகள் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

இந்த கையளிப்பு நிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தினர், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க