“ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

கடந்த 2004 ஆண்டு மட்டக்களப்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, நினைவுச் சுடரேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ‘ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீமினால் குறித்த நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.