உழைப்பாளர் தின கவிதை

தாய் அவள் உழைப்பின்றி
தரணி காண இயலாது
தந்தை அவன் உழைப்பின்றி
தனித்து இயங்க முடியாது
தமயன் அவன் உழைப்பின்றி தரணியில்
விரும்பிய ஏதும் கிடைக்காது
தங்கை அவள் உழைப்பின்றி தரணியில்
இன்பம் ஒன்றும் பிறவாது
தாதி அவள் உழைப்பின்றி தரணியில்
உயிர்கள் காக்க இயலாது
தச்சன் அவன் உழைப்பின்றி தரணியில்
உறையுள் ஒன்றும் இருக்காது
தாரம் அவள் உழைப்பின்றி தரணியில்
துன்பம் ஏதும் மறையாது
கணவன் அவன் உழைப்பின்றி
கணவுகள் நினைவாக இயலாது

உறவினர்கள் உழைப்பின்றி தரணியில்
கூடி வாழ இயலாது
ஆசான் அவர் உழைப்பின்றி தரணியில்
சிறிதும் சாதிக்க முடியாது
சாரதிகள் உழைப்பின்றி தரணியை
சுற்றிப்பார்க்க எல்லாம் கிடைக்காது
வைத்தியர்கள் உழைப்பின்றி தரணியில்
சீவித்து வாழ முடியாது
நண்பர்கள் உழைப்பின்றி தரணியில்
மகிழ்ச்சிகள் அதிகம் பெருகாது
வியாபாரிகள் உழைப்பின்றி தரணியில்
உணவும் உடையும் கிடைக்காதுமாண
மாணவர்கள் உழைப்பின்றி தரணியில்
தலைவர்கள் உருவாக முடியாது
விஞ்ஞானிகள் உழைப்பின்றி தரணியில்
அங்ஞானங்கள் ஏதும் ஒழியாது
கலைஞர்கள் உழைப்பின்றி தரணியில
பொழுதுகள் ஒன்றும் கழியாது

இத்தனை பேர் உழைப்பின்றி தரணியாலே
சற்றும் இயங்க இயலாது
உழைக்கும் அத்தனை கரங்களுக்கும்
உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்