
உலக அதிசயங்கள்
💥உலகின் ஏழு அதிசயங்கள் தாஜ்மஹால், கொலோசியம், மச்சு பிச்சு, கிறிஸ்ட் தி மீட்பர், சிச்சென் இட்ஸா, பெட்ரா மற்றும் சீனப் பெருஞ்சுவர் போன்றவையாகும். இந்த ஏழு அதிசயங்களில் ஒவ்வொரு அதிசயமும் தனி தனி நாடுகளில் அமைந்துள்ளது. நாம் அனைவரும் ஏழு அதிசயங்கள் பெயரினையும் அவை எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைத் தெரிந்துக்கொள்ளுவோம்.
தாஜ்மஹால்

💦ஷாஜகான் மறைந்த அவருடைய மனைவியின் நினைவாக கட்டப்பட்டது தான் தாஜ்மஹால். இன்றும் இந்தியாவின் முகலாய கட்டிடக்கலையின் மகுடமாக விளங்கி வருகிறது தாஜ்மஹால். இந்த தாஜ்மஹாலானது வெள்ளை சலவைக்கற்களை கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கொலோசியம்

💦உரோம் நகரத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரோம் நகர மைய பகுதியில் இத்தாலி நாட்டில் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக பிரசித்தி பெற்ற கொலோசியம் கட்டப்பட்டது. இதன் வடிவமைப்பு, காலத்தை கடந்து, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் வடிவமைக்கப்படும் நவீன விளையாட்டரங்க வடிவமைப்புக்கு அடிப்படையாக, அதனைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
மச்சு பிச்சு

💦மச்சு பிச்சு மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளம், பெரு நாட்டில் உள்ளது. அமேசான் காடுகளுக்கு மத்தியில், உருபம்பா நதிக்கு மேல் அமைந்துள்ளது. இது குஸ்கோவிற்கு அருகிலுள்ள ஒரு இன்கான் தளம் ஆகும். இந்த இடம் ஆண்டிஸ் மலைகளில் அமைந்துள்ள சில முக்கிய கொலம்பிய இடிபாடுகளில் ஒன்றாகும். இந்த இடத்தில் விவசாய நிலங்கள், பிளாசாக்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கோயில்கள் ஆகியன உள்ளன.
கிறிஸ்ட் தி மீட்பர்

💦பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் கார்கோவடோ மலை மீது 38 மீட்டர் அளவிற்கு கிறிஸ்துவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ஹைட்டர் டா சில்வா கோஸ்டா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, பால் லாண்டோவ்ஸ்கி என்ற பிரஞ்சு சிற்பியால் கிறிஸ்து சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை வடிவமைக்க 5 ஆண்டுகள் ஆனது. 12 ஒக்டோபர் 1931 அன்று சிலை திறக்கப்பட்டது. ரியோ-டி-ஜெனிரோ நகருக்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.
சிச்சென் இட்ஸா

💦மெக்ஸிகோவின் யுகடான் தீபகற்பத்தில் உள்ள மாயன் நகரம் சிச்சென் இட்ஸா. இந்த நகரம் கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் செழிப்பாக இருந்தது. மாயன் பழங்குடி இட்ஸாவின் தலைமையில், பல முக்கியமான நினைவுச்சின்னங்களும் கோயில்களும் கட்டப்பட்டன.
பெட்ரா

💦உலகின் பண்டைய நகரங்களில் ஒன்று, பெட்ரா. இது, ஜோர்டானில் உள்ள ஒரு தொலைதூர பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மணற்கல்லால் ஆன மலைகள் மற்றும் குன்றின் மத்தியில் அமைந்துள்ளது. மோசஸ் ஒரு பாறையைத் உடைத்து, தண்ணீர் வெளியேற்றிய இடங்களில் இதுவும் ஒன்று என்று நம்பப்படுகிறது. நபாடேயர்கள் என்ற அரபு பழங்குடி இனம், இந்த இடத்தை தங்கள் தலைநகராக மாற்றினர். பின்னர், அது செழித்து, ஒரு முக்கியமான வர்த்தக மையமாக மாறியது. குறிப்பாக மசாலாப் பொருட்கள் வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான இடமாக திகழ்ந்தது.
சீனப் பெருஞ்சுவர்

💦தி கிரேட் வால் ஆஃப் சைனா என்று அழைக்கப்படும் சீனப் பெருஞ்சுவர், உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் ஒன்றாகும். இதன் நீளம் 8850 கிலோமீட்டர்கள் ஆகும். இதற்கு இணையான சுவர்களின் கட்டுமானப் பணி, கிமு 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்தது. இந்த சுவர், விண்வெளியிலிருந்து பார்க்கக்கூடிய ஒரே அமைப்பு என்றும் கூறப்படுகிறது
உலக அதிசயங்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்