உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஷாருக்கானுக்கு முதல் இடம்
உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் முதலாம் இடம் பிடித்துள்ளார்.
டைம்ஸ் சஞ்சிகை ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியை விட அதிக வாக்குகள் பெற்று நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.
கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன.
இந்தப் பட்டியலில், தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக டைம்ஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்