உணவுப் பணவீக்கப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் இலங்கை

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் உலக வங்கி தீர்மானித்துள்ளது.

பணவீக்கம் குறைந்து வருவதால் கடந்தாண்டு முதல் இலங்கை இந்த சுட்டெண்ணில் இணைக்கப்பட்டிருந்தது எனினும் தற்போது பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.

இவ் அறிக்கைக்கு அமைய முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களை லெபனான், சிம்பாம்வே மற்றும் ஆர்ஜென்டினா பிடித்துள்ளன. அந்த நாடுகளில் பணவீக்கம் முறையே 261, 128 , 107 சதவீதம் ஆகும்.