உடுவில் மகளிர் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஈருருளிப் பவனி
உடுவில் மகளிர் கல்லூரியின் 200ஆவது ஆண்டை நிறைவையொட்டி உந்துருளி பவனியும் நடைபவனியும் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உந்துருளி பவனியானது தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு உடுவில் மகளிர் கல்லூரியை வந்தடைந்தது.
டானியல் புவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி வே.பத்மதயாளன் அவர்களால் பாடசாலைக்கொடி அசைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் செல்வி றொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர்கள், முதல் அதிபர் வின்ஸ்லோவின் கொல்லு கொள்ளு பேரன், ஆசிரியர்கள், மாணவிள், பழைய மாணவிகள் என இரண்டாயிருத்திற்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.