ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் இப்ராஹிம் பிணையில் விடுதலை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர், இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

2019 ஈஸ்டர் தாக்குதலின் போது கொழும்பில் உள்ள இரண்டு பிரபல ஹோட்டல்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய, மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.