
இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல்
-யாழ் நிருபர்-
வவுனியா – செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இளைஞர் ஒருவர் வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பிய நேரத்தில் அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று குறித்த இளைஞர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து சென்றது.
காயமடைந்த இளைஞர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு உறவினர்களால் அனுப்பி வைக்கப்பட்டதுடன், செட்டிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.